admin
சூர்யா – ஜோதிகா புகைப்படங்கள் வைரல்
மும்பையில் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி – ராதிகா திருமணம் நடைபெற்றது. இதில் உலகளவில் உள்ள பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், ஒட்டுமொத்த இந்தி திரையுலகமும் கலந்து கொண்டு புதுமண தம்பதியினரை வாழ்த்தினார்கள். அனந்த் அம்பானி – ராதிகா ஆகியோரது திருமண விழாவில் தமிழ் திரையுலகிலிருந்து ரஜினி குடும்பத்தினர், சூர்யா – ஜோதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவில் கலந்து கொள்ளும் முன்பு சூர்யா – ஜோதிகா இருவரும் இணைந்து போட்டோ ஷுட் எடுத்துக் கொண்டுள்ளனர். அதனை …
Read More »‘ஜமா’ டீஸர்
‘அந்தகன்’ ட்ரெய்லர்
‘Gladiator II’ Trailer
‘தங்கலான்’ ட்ரெய்லர்
தமன்னாவுடன் திருமணம் எப்போது? – விஜய் வர்மா பதில்
முன்னணி நடிகையான தமன்னா – விஜய் வர்மா இருவருமே காதலர்களாக வலம் வருகிறார்கள். இருவருமே தங்களுடைய காதல் குறித்து வெளிப்படையாக பேசிவிட்டார்கள். ஆனால், திருமணம் எப்போது என்பது இன்னும் தெரியாமல் உள்ளது. இதனிடையே ‘மிர்சாபூர் சீசன் 3’ தொடரில் விஜய் வர்மாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பாக அளித்த பேட்டியில் தமன்னா உடனான உறவு, திருமணம் குறித்து பேசியிருக்கிறார் விஜய் வர்மா. அதில் அவர் கூறியிருப்பதாவது: “தமன்னா உடனான உறவு வலுவாகவும், அன்பாகவும் இருக்கிறது. இருவருமே எங்களுடைய காதல் குறித்து மக்களின் …
Read More »சித்தார்த் அடுத்த படத்தின் படக்குழுவினர் அறிவிப்பு
‘இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு ஸ்ரீகணேஷ் இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் சித்தார்த். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கவுள்ளார். இதன் ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்று (ஜூலை 14) சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘மாவீரன்’ வெளியான நாளாகும். இதனை முன்னிட்டு தங்களுடைய அடுத்த தயாரிப்பில் நடிக்கவிருப்பவர்கள் பட்டியலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் மற்றும் சைத்ரா அச்சர் ஆகியோர் சித்தார்த் உடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொழில்நுட்பக் குழுவினர் …
Read More »’சர்பிரா’ வசூல்: படக்குழுவினர் அதிர்ச்சி
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’. விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனை திரையரங்கில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் அவ்வப்போது எழுந்து வருகிறது. தற்போது இதே படத்தினை இந்தியில் ரீமேக் செய்திருக்கிறார்கள். அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தினை சுதா கொங்காராவே இயக்கியுள்ளார். ‘சர்பிரா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழு நினைத்தது. ஆனால், முதல் …
Read More »‘RC 16’ அப்டேட்: சிவராஜ்குமார் ஒப்பந்தம்
‘உபெனா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் புச்சி பாபு சனா. மாபெரும் வரவேற்பைப் பெற்ற அந்தப் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார். இதனையும் ‘உபெனா’ படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. இதன் படப்பூஜை முடிவுற்று, விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிவராஜ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நாயகியாக ஜான்வி கபூர், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரத்னவேலு ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள். …
Read More »