சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’. விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனை திரையரங்கில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் அவ்வப்போது எழுந்து வருகிறது. தற்போது இதே படத்தினை இந்தியில் ரீமேக் செய்திருக்கிறார்கள்.
அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தினை சுதா கொங்காராவே இயக்கியுள்ளார். ‘சர்பிரா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழு நினைத்தது.
ஆனால், முதல் நாளில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது. இரண்டாம் நாள் வசூலும் அதிகரிக்கவே இல்லை. இதனால் படம் பார்க்க வருபவர்களுக்கு இலவச கூப்பன் என அறிவித்து படத்தின் வசூலை அதிகரிக்கலாம் என திட்டமிட்டுள்ளது.