Karthi in Kaithi

‘கூலி’க்கு பின் ‘கைதி 2’: லோகேஷ் கனகராஜ் திட்டம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் ஹைதராபாத் படப்பிடிப்பு முடிவடைந்து சென்னையில் நாளை (ஜூலை 15) முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

‘கூலி’ படத்தினை முடித்துவிட்டு ‘கைதி 2’ தொடங்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளை ‘கூலி’ படத்துக்கு இடையே தொடங்கவுள்ளார். இதில் இதுவரை வெளியான LCU படங்களில் நடித்த நடிகர்கள் அனைவருமே நடிக்கவுள்ளார்கள்.

திரையுலகில் இருந்து விஜய் விலக இருப்பதால், அவர் மட்டும் குரல் கொடுக்கவுள்ளார். மீதமுள்ள அனைவருமே நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. எல்.சி.யூ படங்களின் வரிசையில் இறுதியாக ‘விக்ரம் 2’ இருக்கும் என்று லோகேஷ் கனகராஜ் முன்பே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *