மும்பையில் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி – ராதிகா திருமணம் நடைபெற்றது. இதில் உலகளவில் உள்ள பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், ஒட்டுமொத்த இந்தி திரையுலகமும் கலந்து கொண்டு புதுமண தம்பதியினரை வாழ்த்தினார்கள்.
அனந்த் அம்பானி – ராதிகா ஆகியோரது திருமண விழாவில் தமிழ் திரையுலகிலிருந்து ரஜினி குடும்பத்தினர், சூர்யா – ஜோதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவில் கலந்து கொள்ளும் முன்பு சூர்யா – ஜோதிகா இருவரும் இணைந்து போட்டோ ஷுட் எடுத்துக் கொண்டுள்ளனர்.
அதனை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் “ஒன்றா இரண்டா ஆசைகள்” என்ற பாடலின் பின்னணியோடு பதிவிட்டார். இது இணையத்தில் பெரும் வைரலாக பரவியது. இதனால் எக்ஸ் தளத்தில் இந்தியளவில் இருவரின் புகைப்படங்கள் ட்ரெண்ட்டானது.
View this post on Instagram